பாப்பன் கால்வாயில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போலீசார் குவிப்பு
கடையநல்லூர்: பாப்பன் கால்வாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று அகற்றினர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணை உள்ளது. இதன் மூலம் சுமார் 10,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கருப்பாநதி அணைக்கட்டிலிருந்து பாப்பன் கால்வாய், சிவலன கால்வாய், பெருங்கால்வாய் உள்பட 5 கால்வாயகள் மூலம் இப்பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் பாப்பன் கால்வாய் கடையநல்லூர் நகர பகுதி வழியாகச் செல்கிறது. பாப்பன் கால்வாயின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாய சங்கத்தினர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணி்த்துறைக்கு கடந்த ஆண்டு உத்தரவி்ட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆக்கிரமிப்பு ஓரளவு அகற்றப்பட்டது. முழுமையாக அகற்ற வேண்டுமென விவசாய சங்கத்தினர் வலியுறுத்தவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆககிரமிப்பு அகற்றும் பணி பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மலம்பாட்டை நகர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் வந்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையொட்டி பாதுகாப்பிற்காக அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications