படிக்க வந்த இடத்தில் காதல்.. வீட்டு ஓனரின் மகளுடன் ஓடிய மாணவருக்கு வலை வீச்சு!
திருவள்ளூர்: மதுரையிலிருந்து படிக்க வந்து தனது சித்தப்பா வாடகைக்கு குடியிருந்த வீட்டில் தங்கியிருந்த பொறியியல் கல்லூரி மாணவர், வீட்டு உரிமையாளரின் மகளுடன் காதல் கொண்டு அவருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்.
திருவள்ளூர் வீரராகவர் தெருவைச் சேர்ந்தவர் மைதீன் அப்துல்காதர். இவர் ஜவுளிக்கடை அதிபராவார். இவருக்கு 17 வயதில் ரம்யா பானு என்ற மகள் உள்ளார். பிளஸ் டூ முடித்துள்ளார்.
அப்துல் காதர் தனது வீட்டின் ஒரு பகுதியை மதுரையைச் சேர்ந்த டெய்லர் கதிரவனுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். திருவள்ளூரில் கடை வைத்துள்ளார் கதிரவன்.
இங்கு கதிரவனுடன் அவரது அண்ணன் மகனான 18 வயது ஜெயந்தன் தங்கியிருந்தார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், ரம்யா பானுவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் வீட்டை விட்டுப் போய் விட்டனர்.
இதுகுறித்து அப்துல் காதர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். தனது மகளை ஜெயந்தன் கடத்திக் கொண்டு போய் விட்டதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications