அடுத்தடுத்து 2 சிறுமிகளைக் கற்பழித்த 12 வயது சிறுவன்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் 12 வயது சிறுவன் இரண்டு சிறுமிகளைக் கற்பழித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். அவனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது கோர்ட்.

கிரேட்டல் மான்செஸ்ட்ரில் உள்ள போல்டன் என்ற பகுதியில் முதலில் ஒரு சிறுமியைக் கற்பழித்துள்ளான் இச்சிறுவன். அங்குள்ள பார்க்கில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பலவந்தப்படுத்தி விட்டான்.

அடுத்து அதே பகுதியில் கால்பந்து விளையாடப் போனான். அப்போது அங்கு தன்னுடன் விளையாடிய சிறுமியை நைஸாக தனது வீட்டுக்குப் பின்னால் கூட்டிக் கொண்டு சென்று அங்கு கட்டாயப்படுத்தி செக்ஸ் வைத்துக் கொண்டான்.

இரு சிறுமியரும் தங்களுக்கு நேர்ந்த அக்கிரமத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் சிறுவனைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்க் பிரவுன், நீ இரு சிறுமியரின் சம்மதம் பெறாமல் பலவந்தத்தின் மூலம் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளாய். இதனால் அந்த இரு சிறுமியரும் பெரும் மன வேதனைக்குள்ளாகியுள்ளனர். அவர்களது பெற்றோரின் வலி சொல்லில் சொல்ல முடியாதது என்று கூறினார். பின்னர் சிறைத் தண்டனையை அவர் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+