ஆய்வகங்களில் மனிதர்களை வைத்து மருத்துவ சோதனையா?: உச்சநீதிமன்றம் அதிர்ச்சி
டெல்லி: மத்திய பிரதேசத்தில் அறிவியல் ஆய்வுக் கூடங்களில் மனிதர்களை வைத்து சில மருத்துவ சோதனைகள் நடத்தப்படுவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் சில ஆய்வுக் கூடங்களில் மனிதர்களுக்கு புதிய மருந்துகளை செலுத்தி பரிசோதனை நடப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியும் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். லோதா கூறியதாவது:
மத்தியப் பிரதேசம் மற்றும் நாட்டின் எந்த மூலையிலும், மனிதர்களை ஆய்வுக்குட்படுத்தும் செயல் கண்டிக்கத் தக்கதாகும். மத்திய, மாநில அரசுகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மனிதர்களை பன்றிகளை விட மோசமாக நடத்தப்படுவது துரதிருஷ்டவசமானதாகும். இது குறித்து 8 வார காலத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கும், மத்தியப்பிரதேச மாநில அரசுக்கும் உத்தரவிடப்படுகிறது என்றார் அவர்..












Click it and Unblock the Notifications