பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி நியமனத்துக்கு எதிரான ஜெயலலிதா மனு தள்ளுபடி
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மல்லிகார்ஜூனையா நியமனத்துக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எத்தனை தடைகளைப் போடமுடியுமோ அத்தனை தடைகளையும் ஜெயலலிதா தரப்பு போட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக நீதிபதியின் நியமனமே செல்லாது என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஒரு முறை வெளியிடப்பட்ட அரசாணையே, மற்ற நீதிபதி நியமனத்துக்கும் பொருந்தும். எனவே, வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி நீதிபதி மல்லிகார்ஜூனையா ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சசிகலா ஆஜராவாரா?
மேலும், சொத்து குவிப்பு வழக்கு மீதான விசாரணையை வரும் 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இருப்பினும் ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இதனால் 24-ந் தேதி விசாரணையின் போது சசிகலா ஆஜராவது சந்தேகமே என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications