கேரள இளைஞர்களுக்கு தேனாய் இனித்த அரசியல் வேப்பங்காயானது!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள இளைஞர்கள் அதிகம வெறுக்கும் வார்த்தை அரசியல் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த காலங்களில் கேரளாவில் உள்ள அரசியல் இயக்கங்கள் மாணவர்களை குறி வைத்து தான் இயங்கி வந்தன. மாணவர் அமைப்புகள் அரசியல் இயக்கங்களின் கிளை அமைப்புகளாகவே செயல்பட்டு வந்தன. மாணவர்களும் படிக்கும் காலத்தில் போராட்டங்களில் கலந்து கொண்டு தடியடி வாங்கினர். அரசியல் கட்சிகளின் உத்தரவுப்படி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் தற்போது கேரள இளைஞர்களின் சிந்தனை மாறுபட்டுள்ளது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை போராட்டங்களில் ஈடுபட்டு, தடியடு வாங்கி வீணடிக்க விரும்பவில்லை. ஒழுங்காக படித்து நல்ல வருமானம் கிடைக்கும் வேலைக்கு போக விரும்புகின்றனர். அதனால் ஒரு காலத்தில் அரசியல் என்று சொன்னால் காது வரைக்கும் இனித்த அதே கேரள இளைஞர்கள், மாணவர்களுக்கு தற்போது அந்த வார்த்தை வேப்பங்காயாக மாறியுள்ளது.

இதனால் அரசியல் இயக்கங்களில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் இதை அரசியல் இயக்கங்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்வதில்லை. இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை அரசியலில் ஈடுபட்டு சீரழிக்க விரும்பவில்லை. இளைஞர்களின் இந்த மனமாற்றம் கேரள அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+