துபாயில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: விசாரணை கோரி பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: துபாயில் தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
துபாயில் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கடலில் மீன் பிடிக்கையில் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்துகண்ணன், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கி்சசூட்டில் பலியான சேகரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழக மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். உரிய இழப்பீட்டை அம்மீனவர்கள் பெறுவதற்கான வழிவகைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications