For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தி குறித்த சர்ச்சை.. தடை செய்யப்பட்ட புத்தகம் இன்னும் விற்பனையில்!

Google Oneindia Tamil News

Mahatma Gandhi
காந்திநகர்: மகாத்மா காந்திக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்தது என்று விவரித்த புத்தகம், தடை செய்யப்பட்ட பிறகும்கூட குஜராத்தில் படு சுதந்திரமாக விற்பனையாகி வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளர் ஜோசப் லெலிவெல்ட். இவர் கடந்த ஆண்டு Great Soul: Mahatma Gandhi and his struggle with India என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதில், மகாத்மா காந்தி குறித்த சர்ச்சைக் கருத்து இடம் பெற்றிருந்தது.

காந்திக்கும், அவரது நண்பர் ஹெர்மான் காலன்பேக்குக்கும் இடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்தது என்று தனது நூலில் கூறியிருந்தார் ஜோசப். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த நூலை குஜராத்தில் விற்பனை செய்ய கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தடை செய்தது குஜராத் அரசு.

ஆனால் இப்போது கூட இந்த நூல் தொடர்ந்து விற்பனையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லேண்ட்மார்க் புத்தக நிலையத்தில் இந்த நூல் தொடர்ந்து விற்பனையில் உள்ளதாம். அதுவும் 50 சதவீத தள்ளுபடி விலையில்.

இதுகுறித்து அந்தக் கடையில் விசாரித்தால், தடை செய்யப்பட்ட புத்தகம்தான். ஆனால் இப்போதும் விற்பனையில் உள்ளதே என்று நக்கலாக கேட்கிறார்களாம்.

இந்தப் புத்தகம் தடை விதிக்கப்பட்டபோது அது குறித்து கருத்து தெரிவித்த எழுத்தாளர் ஜோசப் லெலிவெல்ட், இது அவமானமாக இருக்கிறது. வெட்க்கேடான முடிவு இது. நான் எழுதியது பொறுப்பான ஒரு புத்தகம். இதில் காந்தியடிகளின் செக்ஸ் வாழ்க்கை குறித்து நான் கூறவில்லை. மேலும் காந்தியடிகள் பை செக்ஸுவலா அல்லது ஹோமோசெக்ஸுவலா என்றும் நான் விளக்கி விவரிக்கவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Gujarat chief minister Narendra Modi who takes pride in saving Gujarat’s Asmita (self esteem), has not been able to save the greatest son of Gujarat, Mahatma Gandhi from being ‘discredited’. On March 30, 2011, the Gujarat assembly had unanimously passed a resolution banning the book ‘Great Soul: Mahatma Gandhi and his struggle with India’, written by Pulitzer Prize winner Joseph Lelyveld. The book highlighted the relationship between Mahatma Gandhi and his close friend Hermann Kallenbach, which according to reviews hinted that the father of India’s independence was in a homosexual relationship. However, just a year after the ban, the book is easily available at the bookstore ‘Landmark’, that too in the stock clearing sale at a 50% discount.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X