மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!
இந்தூர்: தனது மனைவி வேறு யாரிடமும் போய் விடக் கூடாது என்பதற்காக அவரது மர்ம உறுப்பில் பூட்டுப் போட்டு பூட்டி வைத்திருந்தார் ஒரு கணவன். அந்த மிருக குணம் படைத்த நபரை போலீஸார் கைது செய்து வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
முட்டாள்தனத்திற்கும், மூடத்தனத்திற்கும் அளவே இல்லாமல் போய் விட்டது. இந்தூரைச் சேர்ந்த ஒரு மெக்கானிக், தனது மனைவி வேறு ஆணுடன் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக அவரது மர்ம உறுப்பில் பூட்டுப் போட்டு பூட்டி வைத்துள்ளார். கடந்த நான்கு வருடமாக இந்த சித்திரவதையை அவர் செய்து வந்துள்ளார்.
இந்த மெக்கானிக்குக்கு கல்யாணமாகி 19 வருடங்களாகிறது. ஐந்து குழந்தைகள் உள்ளனர். நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மனைவியின் மர்ம உறுப்புக்கு அருகே துளை போட்டுள்ளார். பின்னர் தான் வெளியே போகும் போதெல்லாம் ஒரு பூட்டைப் பொருத்தி பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டு போய் விடுவாராம்.
இதனால் அந்தப் பரிதாபத்துக்குரிய பெண் சித்திரவதையையும், நரக வேதனையையும் அனுபவித்துள்ளார். சிறுநீர் கழிப்பதில் கூட அவருக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நரக வேதனையைப் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவெடுத்த அவர் எலிக்கு வைக்கும் விஷத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போதுதான் அவரது மர்ம உறுப்பைச் சுற்றி பூட்டு போடப்பட்டிருப்பதை டாக்டர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த முட்டாள் நபரை கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications