கட்சியில் முக்கிய பொறுப்பு: ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும்- சோனியா

மாறிவரும் அரசியல் சூழல்களை மனதில் கொண்டு பார்த்தால், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தவிர்க்க முடியாதது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறியிருந்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் கூடுதல் பங்களிப்பை ராகுல் காந்தி மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது தொடர்பாக செப்டம்பர் மாதத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும்.
காங்கிரஸ் கட்சிக்கான ராகுல் காந்தியின் பங்களிப்பு நிச்சயம் தற்போதைய நிலைமையைவிட கூடுதலாகவே இருக்கும். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடியட்டும். செப்டம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இப்போது காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவிலிருந்து பிரணாப் முகர்ஜி வெளியேறிவிட்ட நிலையில், அந்த இடத்துக்கு ராகுல் காந்தி நியமிக்கப்படக் கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தியிடம், திக்விஜய் சிங்கின் கருத்துக் குறித்துக் கேட்டபோது, கட்சியில் கூடுதல் பங்களிப்பை செய்வதா இல்லையா என்பது குறித்து ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாரும் அந்த முடிவை எடுக்க முடியாது. ராகுலே அதை முடிவு செய்யட்டும் என்றார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications