துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் ஹமீது அன்சாரி

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை ஹமீது அன்சாரி இன்று காலை தாக்கல் செய்தார்.
அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் மனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், திமுகவைச் சேர்ந்த டி.ஆர் பாலு உள்ளிட்ட பலர் அங்கு இருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி ஹமீது அன்சாரிக்கு சுமார் 470 வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸும் அவரை ஆதரித்தால் அவருக்கு 500 வாக்குகள் வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமீது அன்சாரி திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.












Click it and Unblock the Notifications