இங்கிலாந்தில் உயரும் மக்கள் தொகை- 2027ல் 70 மில்லியனாகும்
லண்டன் : இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகை தற்போது 56 மில்லியன் அளவிற்கு அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு வசித்த மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது இது 7.1 சதவிகிதம் அதிகமாகும்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கடந்த 2001 ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இருந்ததைக் காட்டிலும் 3.7 மில்லியன் அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 407 பேர் வசித்து வருகின்றனர்.
இங்கிலாந்திலும், வேல்ஸ் நாடுகளிலும் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே மக்கள் தொகை அதிகரிக்கக் காரணம் என்று கணக்கெடுப்பாளர்கள் கூறியுள்ளனர். ஐரோப்பிய கண்டத்திலேயே அதிக அளவில் மக்கள் வசிக்கும் நாடுகளில் முதலிடத்தை இங்கிலாந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது. இரண்டாவதாக ஹாலந்தும், மூன்றாவது இடத்தை மால்டாவும் தக்கவைத்துக்கொண்டுள்ளன.
இங்கிலாந்து நாட்டில் தற்போது 27.6 மில்லியன் ஆண்களும், 28.5 மில்லியன் பெண்களும் வசித்து வருகின்றனர். 1801 ம் ஆண்டு இங்கிலாந்தின் மக்கள் தொகை வெறும் 8.9 மில்லியன் அளவாக மட்டுமே இருந்த மக்கள் தொகை தற்போது 56.1 மில்லியன் அளவாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் 2027 ம் ஆண்டு இங்கிலாந்தின் மக்கள் தொகை 70 மில்லியன் அளவிற்கு உயரும் வாய்ப்புள்ளது என்று கணக்கெடுப்பாளர்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications