ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே நாளில் 21 பாஸ்புக் கொடுத்த வங்கி
தூத்துக்குடி: சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே நாளில் 21 பாஸ்புக்குகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பத்திரப்பதிவு எழுத்தராக இருப்பவர் ஜெயசிங். அவர் சாத்தான்குளத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஜெயசிங் பணம் எடுப்பதற்கோ, செலுத்தவதற்கோ பாஸ்புக் கொண்டு செல்லவில்லை. இந்நிலையில் மேலாளர் மற்றும் ஊழியர்கள் புதிதாக இடம் மாறுதல் பெற்று வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கிக்கு சென்ற ஜெயசிங் வழக்கம்போல் பாஸ்புக் இல்லாமல் பணம் எடுப்பதற்கான ரசீதை அங்கிருந்த ஊழியரிடம் கொடுத்தார். அதற்கு அந்த ஊழியர் பாஸ்புக் இல்லாமல் பணம் எடுக்க முடியாது என கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து வங்கி மேலாளர் உங்களிடம் இருக்கும் பழைய பாஸ்புக்கை கொண்டு வாருங்கள் என்றார். அதன் பிறகு ஜெயசிங் தன்னிடம் இருந்த பாஸ்புக்கை எடுத்து வந்து கொடுத்தார். அதில் 2007ம் ஆண்டு வரை மட்டமே பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரின் தற்போதைய வரவு செலவு கணக்கை பதிவு செய்து புதிய பாஸ் புக் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அவரது கணக்குகள் 21 பாஸ்புக் வரை பதிவு செய்யப்பட்டது. பின்னர் அநத பாஸ்புக்குகள் ஜெயசிங்கிடம் வழங்கப்பட்டது. இத்தனை பாஸ்புக்குகளைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே நாளில் 21 பாஸ்புக்குகள் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களுக்கு வியப்பை அளித்தது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications