சரத்பவாரை சமாதானப்படுத்த சோனியா முன் வைக்கும் புது 'நம்பர் -2' பார்முலா!

பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் நம்பர் 2- என்ற இடத்தில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நம்பர் 3- ஆக இருந்த சரத்பவார் தமக்கு நம்பர் 2- தகுதி கிடைக்கும் என கனவு கண்டு கொண்டிருந்தார். ஆனால் காங்கிரஸோ காலை வாரிவிட்டது. 4-வது இடத்தில் இருந்த ஏ.கே. அந்தோணிக்கு நம்பர் 2 இடம் கொடுக்க ஆத்திரப்பட்டார் சரத்பவார். இதன் உச்சமாக சரத்பவாரும் அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிரபுல் பட்டேலும் நேற்று மன்மோகன்சிங்கிடம் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது சரத்பவாரை சமாதானப்படுத்தும் விதமாக சோனியா காந்தி பார்முலா ஒன்றைக் கூறியுள்ளார்.
அதாவது பிரதமர் மன்மோகன்சிங் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அமைச்சரவைக் குழுதான் அரசாங்கத்தை நடத்தும். தற்போதைய நிலையில் நம்பர் 2-ஆக இருக்கும் ஏ.கே. அந்தோணி, சரத் பவார் மற்றும் மக்களவை தலைவர் ஆகியோர் அடங்கிய குழு அரசாங்கத்தை நடத்தட்டும் என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார்.
அதாவது நிச்சயம் உங்களுக்கு நம்பர் 2 இடம் கிடையாது... அதனால எப்பவாவது பிரதமர் வெளிநாடு போனால் அரசாங்கத்தை நடத்தும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சோனியா கூறியிருக்கிறார்.
ஆனால் தேசியவாத காங்கிரஸைப் பொறுத்தவரையில் நம்பர் 2- என்ற இடத்தை மிரட்டியாவது பெற்றுக் கொள்வது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் முன்வைக்கும் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டுமெனில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை கொடுக்குமாறு நிர்பந்திப்பது என்ற நிலைப்பாட்டில் தேசியவாத காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் நம்பர் 2 இடத்தை அந்தோணியுடன் பகிர்ந்து கொள்ள வலியுறுத்துவது என்றும் தேசியவாத காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது.
இதேபோல் தமது ஜூனியரான சுஷில்குமார் ஷிண்டேவை அவை முன்னவராக பிரணாப் முகர்ஜி வகித்த பதவிக்கு நியமிப்பதிலும் சரத்பவார் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications