அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை: தண்ணீரின்று வாடும் விளைநிலங்கள்

தென்மேற்கு பருவ மழை எப்போதும் மும்பையில் துவங்கி கேரள மாநிலத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் களை கட்டுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்களுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், கடனாநதி,கருப்பாநதி, மணிமுத்தாறு, அடவிநைனார், குண்டாறு உள்ளிட்ட 11 அணைகள் நிரம்பும். ஜூன் முதல் தேதியன்று பாபநாசம், கடனாநதி, கருப்பாநதி, மணிமுத்தாறு ,அடவிநைனார்,குண்டாறு உள்ளிட்ட அணை நீர் விவசாயத்திற்கு திறக்கப்படும். அதைத் தொடர்ந்து கார் பருவ நெல் சாகுபடி நடக்கும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கரில் நெல் உற்பத்தி நடக்கும். ஆனால் தற்போது மழை பொய்த்து அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் விளை நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. இதனால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ரைஸ்மில் தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பும் பாதிப்படைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
