ராகுலைவிட திக்விஜய் சிங் சிறந்த பிரதமராக இருப்பார்: கோவிந்தாச்சார்யா

Subscribe to Oneindia Tamil

KN Govindacharya
பாட்னா: அமேதி எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தியை விட காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங் சிறந்த பிரதமராக இருப்பார் என்று ராஷ்ட்ரீய ஸ்வாபிமான் ஆந்தோலன் நிறுவனர் கே.என். கோவிந்தாச்சார்யா தெரிவித்துள்ளார்.

மூத்த ஆர்எஸ்எஸ் தலைவரான இவர் தமிழகத்தைச் சேர்ந்தவராவார். பாஜகவின் வழிகாட்டியாக இருந்த அவர் இப்போது கட்சியிலிருந்து தூர இருந்தாலும் இன்னும் சங் பரிவார் அமைப்புகளால் பெரிதும் மதிக்கப்படும் தலைவராவார். இவர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ராகுல் காந்தியுடன் ஒப்பிடுகையில் திக்விஜய் சிங் சிறந்த பிரதமராக விளங்குவார். திக்விஜய் சிங் மத்திய அரசில் அமைச்சராக உள்ளார். மேலும் பெரிய மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அதனால் அவருக்கு நிர்வாக அனுபவம் நிறைய உள்ளது. ராகுல் காந்தி தான் ஒரு வெத்து வேட்டு என்பதையே நிரூபித்துள்ளார். ராகுல் பிரதமர் ஆவதும், ஆகாததும் காங்கிரஸின் உட்கட்சி விவகாரம்.

மத்திய அரசில் உள்ளவர்களுக்கு கிட்டப்பார்வை உள்ளது. மக்கள் என்னிடம் இது குறி்த்து கேட்டால் இந்த பாயிண்டுகளை தெரிவிப்பேன். நிதிஷ் குமாரையோ அல்லது நரேந்திர மோடியையோ ஒப்பிடும்போது சரத் யாதவ், சுப்பிரமணியம் சுவாமி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் சிறந்த பிரதமராக இருப்பார்கள் என்றார்.

வரும் 2014ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+