தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது... இலங்கை தூதர் திமிர்ப் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறார்கள். இதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் பேசியுள்ளார்.

ஏதோ தமிழக மீனவர்கள் இலங்கைக்குப் போய் மீன் பிடிக்க முயன்றது போல அவர் பேசியுள்ளது தமிழக மீனவர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கப் போன தமிழக மீனவர்கள் 23 பேரையும், அவர்களது 5 படகுகளையும், இலங்கை மீனவர்கள் உதவியுடன் இலங்கை கடற்படை காடையர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இதுவரை மத்திய அரசு கருத்தே தெரிவிக்கவில்லை. எங்கேயோ எவனையோ, யாரோ, எதுவோ செய்கிறார்கள் என்பது போல மத்திய அரசு பாராமுகமாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து காரியவாசம் மூலம் வாய் திறந்துள்ளது இலங்கை அரசு. டெல்லியில் அவர் கூறுகையில், இந்திய மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறார்கள். பலமுறை சொல்லியும் அவர்கள் கேட்பதில்லை.

பிடித்துச் செல்லப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் கண்ணியத்துடன் நடத்தப்பட்டு வருகிறார்கள்.விரைவில் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+