பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கடிகள் ஆரம்பம்.. அப்சல் குரு கருணை மனுவை நிராகரிக்க தாக்கரே கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவியேற்க தேர்வு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கடிகள் ஆரம்பித்துவிட்டன.
நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்து தனது பதவிக் காலத்தை பிரணாப் முகர்ஜி தொடங்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணியின் முடிவிலிருந்து விலகி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தந்த பால் தாக்கரே சிவசேனாவின் சாம்னா இதழில் எழுதியுள்ள கட்டுரையில்,
ஜனாதிபதியாக பதவியேற்கும் பிரணாப் முகர்ஜி தனது முதல் வேலையாக அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும். அது தான் அவர் செய்யும் முதல் காரியமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications