பி.இ. கவுன்சிலிங்கில் பங்கேற்க எ.வ. வேலு கல்லூரி்க்கு அனுமதி மறுப்பு: ஹைகோர்ட் உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்குவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி திருவண்ணாமலை மாவட்டம் மாத்தூரில் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வரும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு அருணை பொறியியல் கல்லூரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து அக்கல்லூரியின் முதல்வர் சக்தி கவுரங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி கே. சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், சிறப்பு அரசு வழக்கறிஞர் வி.எஸ்.சுந்தர் ஆகியோர் ஆஜரானாராகள்.
அவர்கள் வாதாடுகையில், அருணை பொறியியல் கல்லூரி நிர்வாகம் தேர்வு முறைகேட்டிற்கு துணை போயுள்ளது. அதனால் அக்கல்லூரி மீது அண்ணா பல்கலைக்கழகம் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து தான் நடப்பு கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் அந்த கல்லூரி கலந்து கொள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுமதி மறுத்தது என்றார்.
அவர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கல்லூரி முதல்வரின் மனுவை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications