ஆர்த்தி ராவ் வழக்கு: மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு நித்யானந்தாவுக்கு சம்மன்

நித்யானந்தாவின் முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் தொடர்ந்த வழக்கு தொடர்பாக மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராகுமாறு மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தாவுக்கு கர்நாடக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நித்யானந்தாவிடம் சம்மன் கொடுப்பதற்காக கர்நாடக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் மதுரை ஆதீன மடத்துக்கு வந்தனர். அப்போது, நித்யானந்தா கொடைக்கானலில் இருப்பதாக மடத்தில் இருந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இருப்பினும் அங்கிருந்த இருந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் சந்திரசேகரன் அந்த சம்மனை அளித்து கையெழுத்து பெற்று சென்றார்.
வரும் 29ம் தேதி ராம்நகர் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆர்த்தி ராவின் வழக்கு தொடர்பாக நித்யானந்தாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து மடத்தின் நிர்வாகிகளிடம் விசாரித்தபோது,
மதுரை இளைய ஆதீனம் சுவாமிஜி நித்யானந்தாவை சந்தித்து சம்மன் கொடுக்க கர்நாடக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் மதுரை ஆதீன மடத்துக்கு வந்தது உண்மை. ஆனால், அவர்கள் எங்களிடம் எந்த சம்மனும் கொடுக்கவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications