பெட்ரோல் விலை உயர்வு: மமதா ஆவேசம்-பிரதமருடன் பேச்சு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை சரிவு ஆகிய காரணங்களைக் காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 70 பைசா உயர்த்தியுள்ளன. இந்த புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆலோசனை நடத்தாமலேயே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
செய்தித்தாள்களைப் பார்த்து தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டோம். இதை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். கூட்டணி கட்சிகளுக்கு கூட சொல்லாமல் விலையை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. இதை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் போராடும். இது குறித்து நான் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசவிருக்கிறேன்.
பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும் என்றார்.
ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோது அதற்கு கண்டனம் தெரிவித்த மமதா விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்று எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications