அசாமில் தொடரும் இனக்கலவரம்- பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இனக்குழுக்கள் இடையிலான மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கபப்ட்டிருக்கிறது.
அசாமின் போடோலாண்டு பிரதேச குழு நிர்வகித்து வரும் மாவட்டங்களில் பழங்குடி இனத்தவருக்கும் சிறுபான்மையினத்தவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று போடோ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 4 பேர் வெள்ளிக்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்தது.
கோக்ராஜ்கர் மாவட்டத்தில் வன்முறை அதிகளவு வெடித்ததால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. கலவரத்தை ஒடுக்க துணை ராண்வ படையும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையில் 21 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று ராஜதானி எக்ஸ்பிரஸ் மீது அடையாளம் தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதையடுத்து இன்று வடகிழக்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே அசாம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில முதல்வர் தருண் கோகயை பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications