தேசியவாத காங்கிரஸுடன் மோதல்- மஹாராஷ்டிரா முதல்வர் சவானை டெல்லி வருமாறு சோனியா அழைப்பு
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் குடைச்சல். கொடுத்து வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்தும்விதமாக மஹாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானை டெல்லி வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்டளையிட்டுள்ளார்.
பிரணாப் முகர்ஜி வகித்து வந்த 2-வது இடத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிர்பார்த்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. அவை முன்னவர் பதவியும் பவாருக்கு கிடைக்காதுபோல் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒருவார காலமாக இரண்டு கட்சித் தலைவர்களும் கூடிகூடிப் பேசிவருகின்றனனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையேயான மோதலுக்கு மஹராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான்தான் காரணம் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதனால் சவானை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா உத்தரவிட்டிருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சவான் முன்னிலையில் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தையை சோனியா நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த பஞ்சாயத்து இன்றைக்காவது முடிவுக்கு வருமா என்று எதிர்பார்ப்போம்!
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications