தேர்தல் முடிவு வெளியிடும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது: தா.பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

Tha Pandian
தூத்துக்குடி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை, முள்ளிவாய்க்காலில் குண்டுமழை பொழிந்தாலும் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்தியாவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது பெட்ரோல் விலை பைசா அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் இது ரூபாயில் உயர்த்தப்படும். அமெரிக்க டாலர் மதிப்பில் பெட்ரோல் வாங்குவதால் ரூபாயின் மதிப்பு குறைகிறது. இந்த விலை உயர்வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். அதற்கு எங்கள் கட்சி துணை நிற்கும்.

இதற்கெல்லாம் காரணமான மத்திய காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். அதுவே எங்களின் தலையாய கடமை. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி மக்களின் ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெறவில்லை. எனவே, இத்தேர்தல் முடிவை வைத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவை கணிக்கக் கூடாது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் கட்சி வாக்களித்த வேட்பாளர் பிரணாப் வெற்றி பெற்றார் என்பதற்காக திமுக எம்.பி. கனிமொழி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை முள்ளிவாய்க்காலில் குண்டுமழை பொழிந்தாலும் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பார். இந்தியாவின் வீழ்ச்சிக்கு திமுக தான் பொறுப்பு என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+