பாபநாசம், பாணதீர்த்த அருவிக்கு செல்ல திடீர் தடை: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
நெல்லை: புலிகள் சரணாலாய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. இதையடுத்து களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பாக பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய விலங்கான புலிகள் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் புலிகள் சரணாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட வர்த்தக மையங்களை அகற்ற வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர் அஜய் துபே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புலிகள் சரணாலயத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக 3 வாரத்திற்குள் அறிவிக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.
இந்த கெடு முடிந்தும் புலிகள் சரணாலயப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்காத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேற்று முன்தினம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை புலிகள் சரணாலயத்தின் உள்பகுதிக்கு யாரும் சுற்றுலா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து நெல்லையில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குனர் பொறுப்பு சண்முக சுந்தரம், இணை இயக்குனர் சேகர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துவது என்று அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும்வரை களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
களக்காடு புலிகள் காப்பகத்தில் செங்கல்தேரி, தலையணை, தேங்காய்உருளி, நம்பி கோயில் உள்ளிட்ட இடங்களும், முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இனிமேல் செல்லக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications