இங்கிலாந்தில் கேட்டதைவிட 2 மடங்கு பணம் தந்த ஏ.டி.எம்: குவிந்த மக்கள்
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள லாய்ட்ஸ் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் ஒன்றில் எடுக்க முயன்ற பணத்தை விட இரண்டு மடங்கு கிடைத்துள்ளது.
இங்கிலாந்தி்ன் இப்ஸ்விச் பகுதியின் நேக்டன் ரோட்டில் லாய்ட்ஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றவர்கள் தாங்கள் எடுக்க வேண்டிய பணத்திற்கு இரண்டு மடங்காக இயந்திரம் பணம் கொடுத்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது.
இதையடுத்து அந்த மையத்தின் முன்பு மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். சுமார் 30 பேர் வரை இரட்டிப்பு பணத்தை எடுத்துள்ளனர். இதற்கிடையே மக்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. உடனே இது குறித்து அங்கிருந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் வங்கி ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
வங்கி ஊழியர்கள் வந்து இயந்திரத்தை ஆஃப் செய்யும் வரை போலீசார் அங்கேயே இருந்தனர்.
இது குறித்து இப்ஸ்விச்சைச் சேர்ந்த எம்மா ஹட்சின்சன் கூறுகையில்,
எனது தோழி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். இயந்திரம் கேட்டதை விட இரண்டு மடங்கு பணம் தருகிறது என்று கூறினாள். என் தோழி 40 பவுண்ட் கேட்டதற்கு இயந்திரத்தில் இருந்து 80 பவுண்ட் வந்துள்ளது என்றார்.
லாய்ட்ஸ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நேக்டன் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். சிறிது நேரத்திற்கு கூடுதலாக பணத்தை தந்துள்ளது. தற்போது அதை நிறுத்திவிட்டோம். இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications