நாகை தேமுதிக மாவட்டச் செயலாளருக்கு அடி உதை: கார் உடைப்பு
நாகை: வேளாங்கண்ணி அருகே நாகை தேமுதிக மாவட்டச் செயலாளர் அனீஸ் பாண்டியன் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருப்பவர் வேதாரண்யத்தைச் சேர்ந்த அனீஸ் பாண்டியன் (36). அவர் கட்சி பணிக்காக நாகப்பட்டினம் சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து வேதாரண்யத்திற்கு காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
வேளாங்கண்ணி அருகே உள்ள பரவையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட தனது காரை நிறுத்தினார். அப்போது அங்கிருந்த மோட்டார் சைக்கிளில் அனீஸ் பாண்டியனின் கார் உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் தெற்கு பொய்கை நல்லூரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கும், அனீஸ் பாண்டியனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தாக்குதலில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் விலக்கிவி்ட்டு அவர்களை நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அனீஸ் பாண்டியனின் காரை சிலர் அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களது புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இரு தரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications