துணை ஜனாதிபதித் தேர்தலில் அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும்: ஜஸ்வந்த்சிங்
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகள் தம்மை ஆதரிக்கும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜஸ்வந்த்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ. சங்மாவை அ.தி.மு.க.வும் பிஜு ஜனதா தளமும் ஆதரித்தன. அதே கட்சிகள் என்னையும் ஆதரிக்கும் என நம்புகிறேன்.
தற்போதைய மத்திய அரசின் முடிவெடுக்கும் நடைமுறை சர்வாதிகாரத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. நாங்கள் ஆட்சி நடத்தியபோது ஆலோசனை நடத்தித்தான் எந்த முடிவையும் எடுத்து வந்தோம்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் கொறடா விதிக்க முடியாது. கட்சி தாவல் தடைச் சட்டம் பொருந்தாது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து எந்தக் கட்சியும் தனது உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்பிக்க முடியாது.
நான் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டத்தை ஊடகங்களில் நேரலையாகக் காட்டுவதற்கு முயற்சி மேற்கொள்வேன். ஒரு சமத்தன்மையைக் காண வேண்டிய அவசியம் உள்ளது.
குடியரசு துணைத் தலைவர் என்பவர் எம்.பி.க்களின் தலைவரோ அல்லது கண்காணிப்பாளரோ அல்லர். நாடாளுமன்றம் என்பது பிரசாரத்துக்கான இடமல்ல. நாடாளுமன்றத்தின் அடிப்படைப் பணி சட்டமியற்றுதல் மட்டும்தான் என்றார் ஜஸ்வந்த் சிங்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications