ராட்சத பலம் கொண்ட அதிமுக, திமுகவுக்கு மாற்று கட்சி மதிமுக மட்டுமே: வைகோ

திருச்சி மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,
திராவிட இயக்கத்தின் கொள்கையையும், தனி ஈழ கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்தும் ஒரே கட்சி மதிமுக மட்டுமே. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை சிகிச்சை பெறுவதற்காகக் கூட தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்காதவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவர் தற்போது டெசோ மாநாடு நடத்தப்போவதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை.
கூட்டணிக்காக, சொற்ப இடங்களைப் பெறுவதற்காக காத்துக் கிடக்கும் கட்சி மதிமுக அன்று. தேர்தலில் போட்டியிடாமல் இருந்த காலத்திலும் கூட தமிழகத்தின் இயற்கை வாழ்வாதாரங்களை காக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினோம்.
அதிமுக, திமுக ஆகிய ராட்சத பலம் வாய்ந்த கட்சிகளுக்கு இடையே புதிய மாற்றத்தை மதிமுகவால் மட்டுமே ஏற்படுத்த முடியும். அதற்கான புரட்சி மக்களிடையே கரு கொண்டுள்ளது. மக்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பஞ்சாயத்து அளவில் மதிமுக செயலாளர்கள் நியமிக்கப்ப்டடு வருகிறார்கள். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் தங்களின் செல்போன் எண்களை எனக்கு அளிக்க வேண்டும்.
ஊடகங்களில் மக்கள் பிரச்சனைகள் வெளிவருகையில் அவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க, அவர்களுக்கு வழிகாட்ட செல்போன் எண்கள் உதவியாக இருக்கும். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கரூரில் நடக்கும் மதிமுக மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications