பெ.தி.க. பிரமுகர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த தளி எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் சரண்
திருவண்ணாமலை: கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளராக இருந்த பழனிச்சாமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உட்பட 4 பேர் இன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
பெரியார் தி.க. அமைப்பாளர் பழனிச்சாமி கடந்த 5-ந் தேதி காலையில் தமது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று அவரை துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. அத்துடன் அவரது தலையையும் துண்டித்து வீசியது. இக்கோர கொலையில் தளி எம்.எல்.ஏ.ராமச்சந்திரன், அவரது சகோதரர், மாமனார் ஆகியோருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் தளி எம்.எல்.ஏ.ராமச்சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கடந்த சில வாரங்களாக் தலைமறைவாக இருந்து வந்தனர். மேலும் ராமச்சந்திரன் தமக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனால் இன்று முற்பகல் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் மற்றும் 4 பேர் சரணடைந்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications