அசாமில் இன மோதலால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ப.சிதம்பரம் ஆறுதல்
Subscribe to Oneindia Tamil

அசாமின் கோக்ரஜார், சிராங் உள்ளிட்ட மாவட்டங்களில் போடோ இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் இடையேயான மோதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 4 லட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் மன்மோகன்சிங் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். நிவாரண முகாம்களில் உள்ளோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
நிவாரண முகாம்களில் உள்ளவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்த சிதம்பரம், சொந்த கிராமங்களுக்கு திரும்பி அமைதியாக வாழுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications