ராஜீவ் கொலை குற்றவாளிகளின் மனுக்களை நிராகரிக்க வலியுறுத்துவோம்-இளங்கோவன்
ஈரோடு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளின் கருணை மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்த உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேரையும் தூக்கிலிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மேலும் 3 பேரின் சார்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. இந்த கருணை மனுவை ஏற்று கொள்ள வேண்டும் என்று ஒரு குழுவினரும், அந்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஒரு குழுவினரும் தமிழகத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்த போவதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்த உள்ளோம்.
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 15ம் தேதி திருப்பூரை அடுத்த குன்னத்தூரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை மத்திய அமைச்சர் வாசன் திறந்து வைக்க உள்ளார் என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications