வெடிகுண்டு மிரட்டலால் அமெரிக்காவின் சான்ஆன்டனியோ ஏர்போர்ட் பல மணி நேரம் மூடல்

Subscribe to Oneindia Tamil

San Antonio Airport
சான்ஆன்டனியோ: டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான்ஆன்டனியோ சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தததையடுத்து அவசர அவசரமாக 2,000 பயணிகள் வெளியேற்றப்பட்டு விமான நிலையம் பல மணிநேரம் மூடப்பட்டது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான்ஆன்டனியோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஒரு மர்ம அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் விமான நிலையத்தில் மூன்று இடங்களில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். அழைப்பு வந்த அரை மணி நேரத்திற்குள் விமான நிலையத்தில் இருந்த 2,000 பயணிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தங்க வைப்பட்டனர்.

இது தவிர 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 28 விமானங்கள் தாமதமாகின. வெடிகுண்டு நிபுணர்கள் குண்டுகளைக் கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற நாய்களுடன் வந்து விமான நிலையத்தில் சோதனையிட்டனர். அப்போது நாய்கள் கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த 3 கார்கள் அருகே சென்று குரைத்தன. இதையடுத்து அந்த கார்கள் அகற்றப்பட்டன. ஆனால் இறுதியில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. அந்த அழைப்பு வெறும் புரளி என்று தெரிய வந்தது.

இதையடுத்து பல மணி நேரங்கள் கழித்து விமான நிலையம் திறக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+