ரஞ்சிதாவை நித்யானந்தா கைலாய யாத்திரைக்கு அழைத்துச் சென்றது எனக்குத் தெரியாது: ஆதீனம்

மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா கடந்த 27ம் தேதி கைலாய யாத்திரைக்கு புறப்பட்டார். இந் நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்பட 32 பேரின் பாஸ்போர்ட்டை ஏஜெண்டு ஒருவரிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட்டுகளை முடக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்மை பரிசோதனைக்காக கர்நாடக மருத்துவமனையில் ஆஜராக வேண்டிய நிலையில் நித்யானந்தா வெளிநாட்டுத் தப்பியோட திட்டமிட்டிருந்ததாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இந் நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அளித்துள்ள ஒரு பேட்டியில், டெல்லியில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்பட 32 பேரின் பாஸ்போர்ட்கள் முடக்கம் செய்யும் நிலையில் இருப்பது குறித்து மனவேதனைப்படுகிறேன்.
நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா கைலாய யாத்திரைக்கு செல்வது குறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. நித்யானந்தாவின் சீடர்களும் இதுபற்றி தெரிவிக்கவில்லை. முறைப்படி என்னிடம் நித்யானந்தா தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை.
நித்யானந்தாவுக்கு ஆள்பலம் இருக்கிறது. அவர் மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை மீட்டு தருவார் என்ற நம்பிக்கை காரணமாகவும், நல்ல நோக்கத்திற்காகவும்தான் இளைய ஆதீனமான நியமித்தேன் என்று கூறியுள்ளார் ஆதீனம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications