திருப்பி கொடுக்கும் நேரம், ஜெயா-சசி உறவு; முப்பதாண்டு வரலாறு'.. இந்தியா டுடே மீது ஜெ அவதூறு வழக்கு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: பிரபல வாரப் பத்திரிக்கையான இந்திய டுடே மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

முதல்வர் ஜெயலலிதா சார்பில் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்கிறேன். இந்தியா டுடே தமிழ் வாரப் பத்திரிகையின் சமீபத்திய இதழில், திருப்பிக் கொடுக்கும் நேரம், ஜெயா-சசி உறவு; முப்பதாண்டு கால வரலாறு' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அதில் செங்கோட்டையன் பதவி நீக்கம் கட்சி, மற்றும் ஆட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் மீண்டும் வருவதை காட்டுகிறது. செங்கோட்டையன் விஷயத்தில் சசிகலா ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்துவிட்டதாக கூறுகின்றனர்' என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த செய்தி முதல்வருக்கு கஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியின் மூலம், முதல்வருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர். அரசு இயந்திரம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக அமைச்சரை பதவி நீக்கம் செய்து முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனவே இந்தியா டுடே பத்திரிகையின் ஆசிரியர் எம்.ஜெ.அக்பர், வெளியீட்டாளர் உட்பட 9 பேர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் பிரபல இதழ்களான ஜூனியர் விகடன் மற்றும் நக்கீரன் மீதும் முதல்வர் ஜெயலலிதா சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+