ஒலிம்பிக் அணிவகுப்பில் நான் வந்திருக்க கூடாது-இந்திய அணியுடன் வந்த மதுரா வருத்தம்

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் ஒவ்வொரு நாட்டு அணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்திய அணியின் அணிவகுப்பின் போது, இந்திய வீராங்கனைகள் மஞ்சள் நிற சேலை அணிந்து வந்தனர். ஆனால் அணிவகுப்பில் தேசிய கொடி ஏந்தி சென்ற இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கு அருகில், ஒரு பெண் மட்டும் சிவப்பு நிற சர்ட், நீல நிற பேண்ட் அணிந்து வந்தார்.
வீராங்கனைகளுக்கு இடையே அணிவகுப்பில் கலந்து கொண்ட அந்த பெண் குறித்து இந்திய ஒலிம்பிக் அணியை வழிநடத்தி சென்ற முரளிதரன், ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் புகார் அளித்தார்.
விசாரணையில் அவர் பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் முதுநிலை பட்டம் படிக்கும் மாணவி என்பதும், அவர் ஒலிம்பிக் துவக்க விழாவில் நடனமாட தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் துவக்க விழாவில் அணிவகுப்பில் தான் கலந்து கொண்டதால் ஏற்பட்ட குழப்பத்திற்கு மதுரா நாகேந்திரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனது நடவடிக்கையினால் பலருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எனது நடவடிக்கையினால் இவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனது தவறை நான் ஊடகங்களுக்கு மறைக்க விரும்பவில்லை. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க எனது வாழ்த்துக்கள் என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications