உ.பி. அனாதை விடுதிகளில் விதவைகள் உடல்களை துண்டு துண்டாக வெட்டும் வழக்கம்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அனாதை விதவைகள் இறந்துவிட்டால் அவர்களது உடல்களை வெட்டி துண்டு துண்டாக பைகளில் கட்டி அடக்கம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச அனாதை விதவைகள் தங்கியுள்ள விடுதிகளில் நடைபெறும் இது போன்ற கொடூரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய சட்டமைய அமைப்பின் சார்பில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மனுவில், உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே விரிந்தாவன் என்ற இடத்தில் அரசு அனாதை விடுதிகளில் முறைப்படி இறுதி சடங்கு செய்வதில்லை. அதற்கு அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால் இறந்த விதவைகளின் உடல் களை துண்டு துண்டாக வெட்டி சாக்கு பைகளில் போட்டு அப்புறப்படுத்தும் நிலை உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், மதன் லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
விதவைகள் இறந்ததும் உடல்களை உரிய மரியாதையுடன் அவர்கள் சார்ந்த மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்ய வேண்டும். அனாதை விடுதிகளில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மதுரா மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி, அனாதை விடுதிகளில் இறக்கும் விதவைகளின் உடல்களை உரிய மத வழக்கப்படி அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications