நெல்லையில் தேமுதிக பேனர்கள் அகற்றம்: தொண்டர்கள் சாலை மறியல்
நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் அக்கட்சியினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றினர். இதைக் கண்டித்து தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 25ம் தேதி தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தேமுதிகவினர் அவரது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். வரும் 6ம் தேதி நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேமுதிக சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
நெல்லையில் நடைபெறும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக தேமுதிக சார்பில் கட்சி பேனர்கள், போர்டுகள் வைக்கப்பட்டு வந்தன. போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி போக்குவரத்து போலீசார் அவற்றை அகற்றிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தொண்டர்கள் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் இன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் விஜயகாந்த் கலந்துகொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவினர் வைத்துள்ள பேனர்களை அகற்றாத போலீசார் தங்களை மட்டும் பேனர்களை வைக்கக் கூடாது என்று கூறுவது திட்டமிட்ட சதி என்று அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications