மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் மர்ம சாவு: பரபரப்பு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி அருகே உள்ள வள்ளிகாவு பகுதியில் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் உள்ளது. கடந்த 1ம் தேதி ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்தமயி பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார். இதையொட்டி ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அப்போது திடீரென ஒரு வாலிபர் மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்றார். உடனடியாக பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கருணாகப்பள்ளி போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் சத்னாம் சிங்மான் என்றும், பீகார் மாநிலம் காயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பீகாரில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படித்து வந்த அவர் மனநிலை பாதிக்கப்பட்டதால் படிப்பை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கேரளா வந்த அவர் கொல்லம் ஆசிரமத்தில் வைத்து மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். கருணாகப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கொல்லம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொல்லம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் போரூர் கடை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனநல மருத்துவமனையில் உள்ள குளியலறையில் மயக்கமடைந்த நிலையில் சத்னாம் சிங் கிடந்தார். உடனடியாக அவரை திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து
திருவனந்தபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயனற வாலிபர் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications