ஸ்ரீபெரும்புதூர் அருகே சுவர் இடிந்து 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது குன்னம் கிராமம். இங்கு ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications