டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: 114 மையங்களில் தேர்வு
சென்னை: வரும் 12ம் தேதி நடைபெறவிருக்கும் குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் 3,631 பேரை தேர்வு செய்வதற்கான குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 13ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் துணை பதிவாளர் (52), நகராட்சி ஆணையர் (14), உதவிப் பிரிவு அலுவலர் (12), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (3), முதுநிலை ஆய்வாளர் (181), கண்காணிப்பாளர்/ இளநிலை கண்காணிப்பாளர் (162), இளநிலை கூட்டுறவு தணிக்கையர் (229), வருவாய் உதவியாளர் (380) உள்ளிட்ட பதவிகளுக்குத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வு எழுத மொத்தம் 6 லட்சத்து 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 12ம் தேதி மொத்தம் 114 மையங்களில் 3,456 தேர்வு கூடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தகவல் பெறலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications