ஈரான் செல்கிறார் மன்மோகன் சிங்!

ஈரானின் அணுத் திட்டங்களைக் காரணமாகக் காட்டி அந்த நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகளையும், கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்ததையும் அறிவித்து அந்த நாட்டை தனிமைப்படுத்த முயன்று வரும் நிலையில் இந்த அணி சேரா நாடுகள் மாநாடு ஈரானில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈரான் மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தம் அளித்து வருகிறது. ஆனால்,
ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதாரத் தடையை மட்டும்தான் கடைப்பிடிப்போம் என்று இந்தியா கூறி வருகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என பல நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தனிப்பட்ட முறையில், மறைமுகமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவுள்ளார்.
அதே போல பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியும் இதில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டின்போது ஜர்தாரி உள்ளிட்ட தலைவர்களுடன் மன்மோகன் சிங் பேச்சு நடத்தவுள்ளார்.
ஈரானில் நடக்கவுள்ள அணி சேரா நாடுகள் இயக்கத்தின் 16-வது மாநாடாகும். இந்த இயக்கத்தில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
கடந்த மே மாதம் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதி நிஜாத் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டையொட்டி ஈரானில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மன்மோகன் சிங், அகமதி நிஜாத்தை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 12 சதவீதத்தை ஈரானிலிருந்துதான் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications