நெல்லையில் வறட்சி: மழை வேண்டி மாற்றுத் திறனாளி குழந்தைகள் மனமுருகி பிரார்த்தனை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வரும் நிலையில் மழை வேண்டி மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 1 மணி நேரம் பிரார்த்தனை செய்தனர்.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கிடைக்கும் மழை நீர் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் சேமிக்கப்படுகிறது. பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40,000 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக ஜூ்ன் 1ம் தேதி பெய்யும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு துளி கூட பெய்யவில்லை. கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டதால் கார் பருவத்தில் பசுமையாக காட்சியளிக்க வேண்டிய வயல்கள் அனைத்தும் தரிசாகக் உள்ளன.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதமே பெய்யும். எனவே இடைப்பட்ட இரண்டு மாத காலத்துக்கு குடிநீர் தேவையைக் கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் அணைகள், குளங்கள் அனைத்தும் வறண்டு போயுள்ளன. மாவட்டத்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டு காட்சியளிப்பதால் கால்நடைகள் கூட தண்ணீரின்றி தவிக்கின்றன. இந்நிலையில் மழை பெய்ய வேண்டி இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 1 மணி நேரம் பிரார்த்தனை செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications