For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100 அடி உயரத்தில்... தலையில் கேமரா பொருத்தி கான்க்ரீட் தூணில் நடந்த ரஷ்யப் பெண்!

Google Oneindia Tamil News

Fearless Russian 'skywalker' films herself walking along concrete beam
மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு இளம் பெண், நூறு அடி உயரத்தில், கான்க்ரீட் தூண் ஒன்றின் மீது படு துணிச்சலாக நடந்துள்ளார் ஒரு இளம் பெண். கீழே நூற்றுக் கணக்கான வாகனங்கள் சரமாரியாக போய்க் கொண்டிருந்த நிலையில் சற்றும் பயப்படாமல் தான் நடந்து சென்றதை தனது தலையில் கேமராவைப் பொருத்தி அதைப் படமும் பிடித்து அசத்தியுள்ளார் அவர்.

மிக மிக குறுகிய தூண் அது. சாலையின் நடுவே போய்க் கொண்டுள்ள அந்த தூணில் மிக மிக நடை போட்டு நடந்த அந்தப் பெண்ணைப் பார்த்து கீழே போய்க் கொண்டிருந்தவர்கள் பதை பதைக்க வேடிக்கை பார்த்தனர்.

தனது தலையில் ஒரு வீடியோ கேமராவை மட்டும் அவர் பொருத்தியிருந்தார். பாதுகாப்பு சாதனங்கள் எதையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. மிக மிக மெதுவாக தூணில் நடந்ததை வீடியோவில் படமாக்கி அதை தற்போது வெளியிட்டும் உள்ளார்.

அந்த வீடியோ காட்சியில், அப்பெண் கீழே பார்த்தபடி நடப்பது பதிவாகியுள்ளது. கீழே போய்க் கொண்டிருக்கும் வாகனங்கள், கான்க்ரீட் தூண் ஆகியவையும் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோவை லைவ்லீக் என்ற வீடியோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை இதுவரை இரண்டரை லட்சம் பார்த்து பயந்துள்ளனர்.

English summary
It is a sight that could make even the most hardened movie viewer feel a little queasy. Hundreds of feet above the ground, a young woman looks down as she walks precariously along a narrow concrete beam while traffic flows below. And while there is no sign of any safety equipment to protect her should she fall, the woman does have a head-mounted camera to film herself as she strolls. The dizzying clip, which has been viewed more than 238,000 times on the video sharing website LiveLeak, is the latest example of a 'skywalking' craze proving popular among young people in Russia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X