நிர்வாண போட்டோ: தந்திரியை மிரட்டிய பெண், டிவி நடிகருக்கு 7 ஆண்டு சிறை

சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரியாக இருந்தவர் கண்டரரு மோகனரு. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி அவரை ஒரு கும்பல் எர்ணாகுளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு வரவழைத்து ஒரு அறையில் அடைத்தது. பின்னர் அவரை மிரட்டி சாந்தா என்ற இளம்பெண்ணுடன் நிர்வாணமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படத்தை வெளியிடப்போவதாக மிரட்டி தந்திரியிடம் இருந்து 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் பணத்தை அந்த கும்பல் பறித்தது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தந்திரி எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மலையாள சினிமா மற்றும் டிவி தொடரில் நடித்து வரும் பிஜ்ஜி ரகுமான் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதில் பிஜ்ஜி ரகுமான் விபச்சார புரோக்கர்களான ஷோபா ஜான், டிரைவர் அனில்குமார், அப்துல் சத்தார், மஜித், ஷெரீப், பிஜி பீட்டர், அஜிஸ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். பினில் குமார் என்ற விஜில், ஆசிப், அப்துல் சகத் ஆகிய 3 பேர் தலைமறைவாகிவிட்டனர். இந்த வழக்கு எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிஜ்ஜி ரகுமான், விபச்சார புரோக்கர் ஷோபா ஜான், டிரைவர் அனில்குமார், அப்துல் சத்தார், மஜித், ஷெரீப் ஆகிய 6 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், பிஜி பீட்டர், அஜிஸ் ஆகிய இருவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications