காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு வீரர் தற்கொலை: ராணுவத்தினர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கும், ஜவான்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் 16வது குதிரைப்படையில் ஜவானாக இருந்தவர் திகருவனந்தபுரத்தைச் சேர்ந்த வி. ஸ்வரண் அருண்(30). நேற்று காலையில் பணியில் இருந்த அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் பேசிய பிறகு அவர் காவலாளியின் அறைக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்குச்சூடு சத்தம் கேட்டு பணியில் இருந்த மற்ற ஜவான்கள் அந்த அறைக்கு ஓடிச் சென்று பார்த்தபோது அருண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவத்தால் ஜவான்கள் மூத்த ராணுவ அதிகாரிகள் மீது ஆத்திரம் அடைந்தனர். ஏனென்னறால் திருவனந்புரம் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பணிபுரியும் ஜவான்களின் மரணத்திற்கு மூத்த அதிகாரிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட அருணுக்கு கம்ப்யூட்டர் பிரிவில் வேலை கொடுக்கப்பட்டபோதிலும் அவரை சென்ட்ரி பணியில் போட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் ஜவான்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அருணின் தற்கொலையால் ஆத்திரமடைந்த ஜவான்களை சமாதானப்படுத்த முயன்ற சுபேதார் தாக்கப்பட்டார். இது குறித்து அறிந்த தலைமை அதிகாரி அந்த இடத்திற்கே வரவில்லை. இந்நிலையில் ஜவான்கள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு மதியம் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு பிரிகேட் கமாண்டர் சம்பவ இடத்திற்கு வந்து ஜவான்களை சமாதானப்படுத்த முயன்றார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக சம்பா மாவட்ட எஸ்.பி. இஸ்ரார் கான் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+