For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியா காந்தி, ராகுலை உண்ணாவிரதம் இருக்க அழைக்கும் பாபா ராம்தேவ்

By Siva
Google Oneindia Tamil News

Baba Ramdev
டெல்லி: கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் 3 நாட்கள் மட்டுமே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் ராம்தேவ் அழைப்பு விடுத்துள்ளார்.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை துவங்கினார். ராம்தேவ் நிச்சயம் சாதிப்பார் என்று நினைத்து மைதானத்தில் 15,000 பேர் கூடியுள்ளனர். இதே கோரிக்கைகளை முன்வைத்து அன்னா குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது கூட்டமே இல்லை.

இந்நிலையில் உண்ணாவிரதத்தை உற்சாகமாகத் துவங்கிய ராம்தேவ் சில மணிநேரம் கழி்த்து இது ஒன்றும் காலவரையற்ற போராட்டம் எல்லாம் கிடையாது 3 நாட்கள் அடையாள உண்ணாவிரதம் தான் என்று அறிவித்துள்ளார். மேலும் தங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்று ராகுல் காந்தி ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 30ம் தேதி வரை ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க ராம்தேவுக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அவர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார் என்று நினைத்து 30 டாக்டர்கள் அடங்கிய குழு மைதானத்தில் முகாமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Baba Ramdev announced that he is not on indefinite fast but 3 days symbollic fast against black money and corruption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X