சென்னை ஹைகோர்ட்டின் 150வது ஆண்டு விழா: ஜெயலலிதாவை நேரில் சென்று அழைத்த தலைமை நீதிபதி

Subscribe to Oneindia Tamil

M.Y.Iqbal and CM Jayalalitha
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் 26-6-1862 அன்று நிறுவப்பட்டது. இங்கு தமிழகம் மற்றும் புதுவை மாநில வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுகிறது.1996ம் ஆண்டு மதராஸ் என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாகப் பெயர் மாற்றப்பட்டபோது உயர் நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மதராஸ் உயர் நீதிமன்றம் (Madras High Court) என்றே வழங்கப்படுகின்றது.

சென்னை உயர் நீதிமன்றம் இந்தோ-சார்சியனிக் முறையில் 1892ல் ஹென்ரி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டு வரும் 15ம் தேதியுடன் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு 150வது ஆண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்றார். அங்கு முதல்வரை சந்தித்து உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு கூறி அழைப்பிதழ் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+