கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவி்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று (9-8-2012) பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக வங்கிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாளாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் குறிப்பேட்டில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகஸ்ட் 8ம் தேதி என்றும், அன்றைய தினம் அரசு விடுமுறை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆகஸ்ட் 9 ம் தேதி தான் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுவதால் 8 ம் தேதிக்கு பதிலாக 9ம் தேதி அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications