வதந்தியை நம்பி கோவை ஏர்போர்ட்டில் சோதனை நடத்திய கேரள போலீசார்
கொல்லம்: கேரள போலீசார் கோவை விமான நிலையத்தில் ஒரு பயணியைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் மணியம்பிள்ளை. போலீஸ் கான்ஸ்டபிள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொல்லம் சாலையிலுள்ள சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டபோது அந்த வழியாக வேகமாக வந்த ஆம்னி வேனை தடுத்தி நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வேனில் வந்த கேரளாவைச் சேர்ந்த ஹார்டு ஆன்டனி என்பவர் மணியம்பிள்ளையை வெட்டிக் கொன்றுவிட்டு காரில் தப்பிவிட்டார்.
ஹார்டு ஆன்டனி நிறுத்திச் சென்ற வேன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இருந்து வாங்கப்பட்டதும், வேனை பல்வேறு கொலை,கொள்ளைகளுக்கு அவர் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது 16 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஹார்டு ஆன்டனி டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வருவதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து பாலக்காடு டவுன் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான கேரள போலீசார் கோவை விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.
அங்கு டெல்லியில் இருந்து வந்த விமானங்களில் பயணித்தவர்களை கண்காணித்தனர். அப்போது ஒரு பயணியை சந்தேகத்தின்பேரில் அழைத்து விசாரித்தனர். அவர் மலேசிய தொழிலதிபர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த தகவல் வதந்தி என தெரிய வந்துள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications